இந்த கிராமத்தின் முக்கிய சாலை கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் பெரிதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாதர் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட கணேஷ் நகர் பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.