திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை (16.5.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.