திருச்செந்தூர் கடற்கரையில் தங்க தடை இல்லை காவல்துறை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை அல்லது திடீர் கனமழையின் போது மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்குமாறு அறிவுறுத்தப்படும். தற்போது கடற்கரை பகுதியில் தங்குவதற்கு எந்தவிதமான தடையும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி