திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். செய்தியாளர்கள் யாருடன் கூட்டணி என கேள்வி எழுப்பியபோது, “வழி விடு முருகா” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார். மக்கள் நன்மைக்காக பிரார்த்தனை செய்ததாகவும் அவர் கூறினார்.