15வது நிதிக்குழு மானியத்திட்டம் 2024–2025 கீழ் ரூ. 45 இலட்சம் மதிப்பீட்டில் அங்கமங்கலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இன்று (03. 12. 2025) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பொதுமக்களை சந்தித்து மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பயனாளிகளுக்கு மருந்துப்பெட்டகங்களையும் வழங்கினார். ஊரக பகுதிகளுக்கு அரசு மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய சுகாதார நிலையம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.