சாயர்புரத்தில் ரூ.1.67 கோடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் ரூ. 1. 67 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். சாயர்புரத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் அ. பாக்கியலெட்சுமி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். திருவைகுண்டம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் பி. ஜி. ரவி, தெற்கு மாவட்ட தி. மு. க துணை செயலாளர் ஜெபதங்கம் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி