தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேயன்விளை கிராமத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலின்போது தேர்தல் காரியாலயத்தில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த நபர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கு நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் வழக்கு விசாரணைக்காக தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜரானார். வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் சுமதி உத்தரவிட்டுள்ளார்.