ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலைபாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜன. 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி தூத்துக்குடி ஆயுதப்படை மைதானம் அருகே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகர காவல் துணை கண்காணிப்பாளர் மதன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் போக்குவரத்து காவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் இந்த பேரணியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.