துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு – விலை அதிரடி உயர்வு! ”

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று கடல் காற்று மற்றும் பௌர்ணமி காரணமாக மீன்களின் வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது. சீலா மீன் கிலோ ₹1600 வரையிலும், ஊழி, பாறை மீன் கிலோ ₹500–700 வரையிலும், கேரை கிலோ ₹350 வரையிலும், நண்டு கிலோ ₹800–900 வரையிலும், சாலை மீன் ஒரு கூடை ₹2500 வரையிலும் விற்பனையானது. பள்ளி விடுமுறை காரணமாக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அதிக விலையிலும் மக்கள் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி