திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட தங்கச் சங்கிலி மீட்பு

திருச்செந்தூர் கடலில் புனித நீராடியபோது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3.5 பவுன் தங்கச் சங்கிலியை தவறிவிட்டார். இதை உள்ளூர் சிப்பி அரிக்கும் தொழிலாளியான மனோ என்பவர் கண்டெடுத்து, நேர்மையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தார். தொழிலாளியின் இந்த நேர்மையான செயலுக்கு காவல்துறையும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி