விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில், வங்கி வாராக்கடன் வழக்குகளில் 916 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 198 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. அதன் மொத்த தீா்வு தொகை ரூ. 3 கோடியே 75 லட்சத்து 85, 859. மேலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 2, 087 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3, 210 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 2, 285 வழக்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்குகளுக்கான மொத்த தீா்வு தொகை ரூ. 5 கோடியே 61 லட்சத்து 22, 506 ஆகும். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலரும் சாா்பு நீதிபதியுமான (பொறுப்பு) அ. பிஸ்மிதா மற்றும் நீதித்துறை நிா்வாகப் பணியாளா்கள் செய்திருந்தனர்.