திருச்செந்தூர்: மது பழக்கத்தை மனைவி கண்டித்தால் கணவர் தற்கொலை

திருச்செந்தூரில் மது குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முந்திரி தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் நாராயணன். இவருக்கு இசக்கியம்மாள் என்று மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளார்கள். இந்நிலையில் நாராயணன் குடிபோதையில் வீட்டுக்கு வருவதால் அவரது மனைவி திட்டினாராம். இதனால் மனமுடைந்த நாராயணன் தனது வீட்டில் முன்பு இருந்த வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி