திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, நாழிகிணற்றில் குளித்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வரிசைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.