தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரகாஷ் (21) மற்றும் இசக்கிமுத்து (26) ஆகிய இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 126 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18.10.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும், 14.10.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் இந்த சம்பவங்கள் நடந்தன. இன்று (18.11.2025) அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.