தூத்துக்குடி மறை மாவட்ட அனைத்து மதுவிலக்கு சபைகளின் ஒருங்கிணைப்பாளர் ரஸ்டன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான, சி. ததி. செல்லப்பாண்டியன் அவர்களை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் பரிந்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சி. த.தி. செல்லப்பாண்டியன் நிச்சயமாக சென்னை சென்று தங்களது கோரிக்கை மனுவை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்து, தமிழக அரசு இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தவும், இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழியாக ஆதரவு அளிப்பதற்கு முன்னாள் முதலமைச்சரிடம் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்தார். சந்திப்பின் போது தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபைகளின் தலைவர் ரூஸ்வெல்ட், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்ட மதுவிலக்கு சபைகளின் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.