தூத்துக்குடி வனக்கோட்டம் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில், நாசரேத் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறை எஸ்.ஐ. பிரான்ஸிஸ் அரவிந்த் தலைமையிலான வனத்துறையினர் துண்டு பிரசுரம் மற்றும் வாகனப் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை ஒப்படைப்பவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.