சாத்தான்குளத்தில் ஆசிரியர் கிளைட்டனின் மோட்டார் சைக்கிள் வாரச்சந்தை பகுதியில் திருடப்பட்டது. இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் பயந்த மர்ம நபர், மறுநாளே பைக்கை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் பைக்கை உரிமையாளரிடம் ஒப்படைத்து, திருடன் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.