இந்த நிலையில் இன்று (செப்.,8) காயல்பட்டிணம் காற்றுதைக்கா தெருவில் உள்ள அரிசியா பள்ளி ஜங்ஷனில் முகமது அப்துல் காதர் சாகுல் ஹமீது (எ) கூலி ஹமீது குடிபோதையில் பொதுமக்களிடம் பிரச்சினை செய்துள்ளார்.
அந்த சமயத்தில் அந்த வழியாக ரோந்து செய்து வந்த ஆறுமுகநேரி சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பசாமி மற்றும் காவலர் ஜவஹர் ஆகியோர் வந்து அப்துல் காதர் சாகுல் ஹமீது (எ) கூலி ஹமீதை வீட்டிற்கு அனுப்ப முயன்றுள்ளனர்.
ஆனால் கீழே கிடந்து எழுந்த அப்துல் காதர் சாகுல் ஹமீது (எ) கூலி ஹமீது ஆறுமுகநேரி சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பசாமியை தாக்க முற்படுகிறார். இதில் மாரிப்பசாமி கையில் வைத்திருந்த கம்பால் தடுக்க முயல்கிறார். ஆனாலும் விடாமல் தொடர்ந்து சென்று மாரியப்பசாமியை போதை ஆசாமி தாக்க முயல்கிறார்.
இந்த காட்சிகள் அங்கிருந்தவர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து வீடியோ காட்சிகள் அடிப்படையில் அப்துல் காதர் சாகுல் ஹமீது (எ) கூலி ஹமீதுவை போலீசார் கைது செய்தனர்.