இதற்கிடையே ரவீந்திரன் தினசரி மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி பாலம்மாளிடம் தகராறு செய்வாராம். மேலும் அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் மதுபோதையில் வந்த ரவீந்திரன் மனைவியிடம் டார்ச்சர் செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி பாலம்மாள் வீட்டில் இருந்த உருட்டுகட்டையால் அவரை சரமாரியாக தாக்கினாராம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து பாலம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.