இந்த இலக்கை அடைய, ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக தேவைகளை துறைமுகத்தின் மூலம் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வேகமாக செயல்படுத்தி வருகிறது. மேலும், துறைமுகம், துறைமுக உபயோகிப்பாளர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி, துறைமுக மேம்பாட்டுத் தேவைகளை மதிப்பீடு செய்கிறது என்றும் பணித்திட்டங்களின் வளர்ச்சியினை கண்காணிக்க கட்டமைக்கப்பட்ட அமைப்புகளை துறைமுகம் உருவாக்குகிறது என்றும் கூறினார்.
இந்த அனைத்து முயற்சிகளும், முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாகவும், திட்டமிட்ட விதமாகவும் செயல்படுத்துவதற்கு ஒரு தளமாக இருந்து வருகிறது. துறைமுகத்தினால் இந்தியாவின் கடல்சார் வர்த்தக வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்கினை அடைய முடியும் என்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.