திமுக எம்எல்ஏ கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில், திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ராகுல் காந்தி குறித்து தரக்குறைவாக பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உருவப்படத்தை கிழித்து, செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர். மேலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டம் தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி