தூத்துக்குடி: மினிபஸ் டிரைவர்களிடையே மோதல்.. ஒருவர் கைது

கோவில்பட்டியில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மற்றொரு மினிபஸ்ஸை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த மினிபஸ் டிரைவர் மதிகுமாரை போலீசார் கைது செய்தனர். நீண்ட நாட்களாக இருந்த முன்விரோதம் காரணமாக, மதிகுமார், கார்த்திக் ராஜாவின் மினிபஸ்ஸை மோதச் செய்து சேதப்படுத்தியதுடன், தீ வைத்து எரிப்பதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதிகுமாரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி