திருச்செந்தூர்: சினிமாவில் நடிப்பது போல் அல்ல - அனிதா

திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தனது அலுவலக பணிகளை தொடங்கி, விவசாயிகளுக்கு மாடு, ஆடு வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்தார். ஜூன் 3-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், புதிய பாதாள சாக்கடை திட்டம், கார் பார்க்கிங், மழைநீர் வடிகால் போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விமர்சித்து, “சினிமாவில் நடிப்பது போல் அல்ல, திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” என பேட்டியில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி