20 நிமிடங்களில் குழந்தை மீட்பு; எஸ்பி பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் கடத்திச் சென்றனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து வாகன தணிக்கையில் 20 நிமிடங்களுக்குள் குழந்தையை மீட்டனர். விசாரணையில், குழந்தையில்லாமல் இருந்த சென்னை சேர்ந்த தம்பதியினர் கோவிலுக்கு வந்தபோது குழந்தையை கடத்தியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி