இதன் காரணமாக ரயிலில் பயணம் செய்த 820 பயனாளிகளும் பெரிதும் அவதி அடைந்தனர். அவர்களை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டனர்.
பின்னர் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மதியம் சுமார் 1. 30 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து டீசல் எஞ்சின் மூலம் மீட்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முழுமையான பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தான் பயணம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரயில்வேத்துறை திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே ஜனவரி 5ஆம் தேதி வரை ரயில் ரத்து என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற 5-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடிவடைந்து விடும் அதன் பின்னர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.