தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள சொக்கன்விளை, சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சுயம்பு (70). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். நேற்று மாலை சுயம்பு உடன்குடியில் இருந்து சைக்கிளில் சொக்கன்விளை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். உடன்குடி பிரதான சாலையில் வரும்போது எதிரே வந்த ஒரு கார் அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுயம்பு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.