தூத்துக்குடி: பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த 8 வயது சிறுவன் உதய சுதர்சன், விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து எடுக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு அல்லது மின்துறை அலட்சியம் காரணமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி