அதன்படி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் பகுதியில் வைத்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 4 பொதுமக்கள் அணிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க நிகழ்வாக அனைத்து அணி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) குருவெங்கட்ராஜ், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் உட்பட காவல்துறையினர், காயல்பட்டினம் நகராட்சி நகர்மன்ற தலைவர் முத்துமுகமது உட்பட பொதுமக்கள் ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இறுதி விளையாட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு