அம்மன்புரம் அருகே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார் (54), மேலப்புதுக்குடி வடக்கூர் பகுதியில் பூனை குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் ஒருவருக்கு லேசான காயமும், மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.