தூத்துக்குடி: கொலை முயற்சி.. 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1997-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர் (54), நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவருக்கு 2001-ஆம் ஆண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சார்பு ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த சேகரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

தொடர்புடைய செய்தி