கோவில்பட்டியில் சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (18), ஹெல்மெட் அணிந்த மர்ம கும்பலால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உயிரிழந்த மனோஜின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.