ஆறுமுகநேரி: பெண் காவலர் பாலியல் தொல்லை புகார்.. ஆய்வாளர் விளக்கம்

திருச்செந்தூர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர், காவல் ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் "பணி செய்யும் காவலர்களை எனது குழந்தையாகத்தான் பார்க்கிறேன். எனது செல்போனை காவல் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க தயார். எனது வேலையை ராஜினாமா செய்யவும் தயார். அனைத்து காவலர்களுக்கும் ஒரே மாதிரி பணி ஒதுக்க முடியாது. நான் பணி செய்த காவல் நிலையத்தில் என்னைப் பற்றி விசாரிக்கவும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி