சாரல் மழையில் நனைந்தபடி யானை உற்சாக குளியல்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான தெய்வானை யானை உள்ளது. 26 வயது கொண்ட இந்த தெய்வானை யானையை குளிக்க வைப்பதற்காக சரவணப் பொய்கையில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது இந்த தொட்டி ஐந்தரை அடி ஆழம் கொண்டது. இதில் சவர் பாத் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதலே திருச்செந்தூர் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சரவண பொய்கையில் தெய்வானை யானை குளிப்பதற்காக நடை போட்டு வந்தது.

சரவண பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் சாரல் மழையோடு இறங்கி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது தெய்வானை யானை. தன்னுடைய தும்பிக்கை மூலம் தண்ணீரை பீச்சியடைத்து உடலை குளிர வைத்து விளையாடியது. அதைத் தொடர்ந்து ஷவர் மேல் உள்ள மேடையில் காலை வைத்து விளையாடி மகிழ்ந்தது. மேலும் நீச்சல் குளத்தில் உள்ள ஷவரில் குளித்தது. தெய்வானை யானை தனது பாகனுடன் கொஞ்சி விளையாடியது. இதை அந்த வழியாக சென்ற பக்தர்கள் அதை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி