ஆறுமுகநேரி அருகே பேயன்விளை தனியார் பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த செல்லத்துரை (36) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ரோந்துப் பணியின்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய சோதனையில், பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.