எட்டயபுரம்: கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

எட்டயபுரம் அருகே, கிணற்றில் குளிக்கச் சென்ற பட்டதாரி வாலிபர் ஜெயராகவன் (33) தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மாலை நேரங்களில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்தி வந்த இவர், இரவு குளிக்கச் சென்று திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். மறுநாள் காலை கிணற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தசைப்பிடிப்பு போன்ற காரணங்களால் அவர் மூழ்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்தி