உடன்குடி: மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு

உடன்குடி அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே பெரியபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வசந்தா (65). இவர்களது ஐந்து மகன்களும் திருமணமாகி வெளியூரில் வசிப்பதால் தம்பதியினர் மட்டும் தனியாக பெரியபுரத்தில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே வசந்தா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், வசந்தா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி