தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் டி.பி. சாலை ஆனந்த விநாயகர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி பிச்சம்மாள் (74). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். இந்த நிலையில் பிச்சம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு நேற்று வந்த இளைஞர், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளார். அவருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
அப்போது பிச்சம்மாள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அந்த இளைஞர், சற்றுநேரம் கழித்து பாட்டிலுடன் வந்து தண்ணீர் கேட்டுள்ளார். பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதற்காக வீட்டுக்குள் சென்றபோது பிச்சம்மாளை பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர், அவரது முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், ஆய்வாளர் கனகராஜ், உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.