ஆறுமுகநேரி: பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது

ஆறுமுகநேரியில் பள்ளி மைதானம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அபூபக்கர் சித்திக் (21) மற்றும் செல்வகுமார் (22) ஆகிய இரு வாலிபர்களை ரோந்து பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி