அப்போது அந்த பள்ளிக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதை தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது 550 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து அந்த 2 பேரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில், ஒருவர் ஆத்தூர் முத்துகிருஷ்ணன் மகன் ஆத்திராஜா (27) என்பதும், தற்போது ஸ்பிக் நகர் சாந்தி நகரபகுதியில் வசித்து வருவதும் தெரிந்தது. மற்றொருவர் புல்லாவெளி வடக்கு தெருவை சேர்ந்த பால்சாமி மகன் விஜய்(26) என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.