தூத்துக்குடி: பூச்சிமருந்து குடித்து பெண் தற்கொலை

தூத்துக்குடியில் பூச்சிமருந்து குடித்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகில் உள்ள தெற்கு தீர்த்தாம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி இசக்கியம்மாள் (60). இவருக்கு வயிற்றுவலி பிரச்சனை இருந்ததாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் சாப்பிட்டும் உடல்நலம் சீராகவில்லையாம். 

இதனால் மனமுடைந்த அவர் கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து பசுவந்தனை காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி