தூத்துக்குடி: அந்த சார் யாரு? ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை.. சீமான் பேட்டி

யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? - தூத்துக்குடி தூத்துக்குடியில் சீமான் பேட்டை தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். இறைவன் எங்கள் இறைவன். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது (திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு) என்பது எவ்வளவு பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம். தாய் மொழியை இழந்த எந்த இனம் தமிழக வரலாற்றில் வாழ்ந்துள்ளது? 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்கும் போது எங்கள் மாநிலத்தில் மட்டும் இறக்க அனுமதி இல்லையே ஏன்? கள் என்பது இயற்கையின் அருள் கொடை. கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல. தமிழ்நாட்டில் மட்டும்தான் சாராயம் தயாரிப்பவரும் விற்பனையாளரும் ஒரே ஆளாக இருக்கின்றனர். பாஜக முருகன் மாநாடு நடத்துவது ஒரு மார்க்கெட்டிங் யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூடு செய்ய அனுமதி கொடுத்த அந்த சார் யார்?

தொடர்புடைய செய்தி