கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளிகளின் தாளாளர் ரமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து விரிவுரையாளர்கள் வினோத், பிரவின்குமார், ஜெசிந் பிரவின் ஆகியோர் சிறப்பு பாடல்கள் பாடினர். கல்லூரியின் ஒழுங்கு முறைகள் குறித்து இயந்திரவியல் துறைத் தலைவர் பிரபாகர் வேதசிரோன்மணி புதிய மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
வேலைவாய்ப்புகள் குறித்து ஆட்டோமொபைல் துறை விரிவுரையாளர் லிவிங்ஸ்டன் நவராஜ், கல்வி உதவி தொகை பற்றி ஜான்வெஸ்லி மற்றும் பேருந்து வசதி குறித்து மர்காசிஸ் மோசஸ் ஆகியோர் பேசினர். நிறைவாக கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். மின்னனுவியல் துறைத் தலைவர் பெனிட்டா ராஜு நிறைவு ஜெபம் செய்தார். இந்நிகழ்ச்சியை விரிவுரையாளர் ஜான் விலிங்டன் தொகுத்து வழங்கினார்.