தூத்துக்குடி மாவட்டத்தில், 2026 வாக்காளர் திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, நவம்பர் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 01.01.2026 தகுதி நாளாகக் கொண்டு நடைபெறும் இத்திருத்தப் பணியில், வீடு வீடாக கணக்கெடுப்பு படிவ விநியோகம் 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு தங்களது விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களைச் செய்யுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.