தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன்மடம் ஊராட்சி செந்தியம்பலம் ஊரில் 1968ல் அமைக்கப்பட்ட 15000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 6 வருடங்களாகக் கழுவப்படாததால், அதில் புறா, பல்லி, வெளவால் எச்சங்கள், பறவை இறகுகள் மிதக்கின்றன. இதனால் வீட்டு இணைப்பு குழாய்கள் மூலம் துர்நாற்றத்துடன் தண்ணீர் வருவதால், மக்கள் சுகாதாரமின்றி தவிக்கின்றனர். புதிய தொட்டி கோரியும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் பெ. ஆனந்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.