திருக்குறள் திருப்பணிகளுக்கான மரம் நடும் விழா

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பில், திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருதாளர் பொன்னி திருக்குறள் கூறும் நற்பண்புகள் குறித்து பேசினார். மேலும், நிகழ்ச்சியில் பதிலளித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பின் ஐந்தாவது பயிலரங்க கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி