தூத்துக்குடி ஆணவ படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட நிலையில் கிராமத்தில் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் உறவினர்கள் சோகத்துடன் அழுதபடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் கவின் பெற்றோர்கள் கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.