தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மைத் துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அறிவழகன், தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால், அறிவழகனைப் பணியிடை நீக்கம் செய்து சென்னை வேளாண்மைத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இளம்பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய ஆடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.