தூத்துக்குடி: போக்சோ வழக்குகளில் சிக்கிய 3 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

தூத்துக்குடி, கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட முருகேசன் (59), இசக்கிராஜா (22), கோபால்சாமி (47) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், இந்த 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி