திருவைகுண்டம் பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத்திடம் பொதுமக்கள் அளித்த புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து பேருந்துகளும் திருவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஊருக்குள் வராத 6 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தார். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவை மதிக்காமல் போக்குவரத்து துறை சார்பில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகளும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளும் தற்போது வரை இடைநிலை பேருந்து என்று ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் தொடர்ந்து திருவைகுண்டம் ஊருக்கு வெளியே பொதுமக்களை இறக்கிவிட்டு செல்கிறது. 

மேலும் அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் திருவைகுண்டம் பகுதிக்கு பஸ்சில் ஏறும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்காமல் அதற்கு அடுத்த ஊர் பகுதிகளுக்கு டிக்கெட் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக திருவைகுண்டம் பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட திருவைகுண்டம் பகுதி பொதுமக்கள் மற்றும் பயனிகள் நலச்சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி