தூத்துக்குடி: கவின் பெற்றோருக்கு திருமாவளவன் ஆறுதல்

ஆறுமுக மங்கலத்தில் பொறியாளர் கவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசும்போது கவின் கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு உள்ளது. எனவே இந்த கொலையில் தொடர்புடைய பெண்ணின் தாயை கைது செய்ய வேண்டும். கொலையில் தொடர்புடைய கூலிப்படையையும் கைது செய்ய வேண்டும். சுபாஷினி சமூக வலைத்தளங்கள் மூலம் தனது கருத்தை வெளியிட்டு இருப்பது அவர் யார் பிடியிலோ இருந்து இதை சொல்லுகிறார் என அவரது உடல் மொழியில் இருந்து தெரிகிறது. 

சைபர் கிரைம் காவல்துறையினர் கவின் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு செய்திகளை தடுத்து நிறுத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி